மட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனிற்கும் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார்.
தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக் கொள்ளுங்கள். எனது கணவர் என்ன செய்வார் தெரியுமாஎன அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே இந்த மிரட்டலை விடுத்துள்ளார். அந்த உயரதிகாரி முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் (கருணா) நெருக்கமானவர் என குறிப்பிடப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
3
+1
+1
5