நானுஓயாவில் பயங்கர விபத்து!

Date:

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து (22.02.2021) இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து முன்னே சென்ற பவுஸர் ஒன்றுடன் மோதி இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து பஸ்ஸில் தடுப்பு கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

–க.கிஷாந்தன்–

spot_imgspot_img

More like this
Related

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்