Pagetamil
இலங்கை

இன்று மேலும் 5 மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் இன்று (22) அறிவித்க்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

துனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிர நீரிழிவு மற்றும் சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 (புதுக்கடை/வாழைத்தோட்டம்) பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் குருதி விஷமடைவு மற்றும் சிறுநீரக வழியில் உக்கிர தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (22) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா உக்கிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலியை குத்திக்கொன்ற காதலன் சரண்!

Pagetamil

உளறல்களின் எதிரொலி: அர்ச்சுனாவிற்கு பாராளுமன்றத்தில் தற்காலிக தடை!

Pagetamil

கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவான திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகள்

Pagetamil

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பாதுகாப்பு வழங்கியவர்களும் உடந்தையா?

Pagetamil

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment