கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டது.
சில மணி நேரத்தில் சேவைகள் சீர் செய்யப்பட்டன.
குறித்த புகையிரதத்தின் காட்சிகாண் கூட பெட்டி தண்டவாளங்களை விட்டு பாய்ந்ததில் இந்த மலையக புகையிரத சேவை தடைப்பட்டன.
புகையிரத தடையினை நிவர்த்தி செய்வதற்காக நாவலப்பிட்டியிலிருந்து பாரதூக்கி புகையிரதம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1