தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள், என்ற பெயர்களில் ஆங்காங்கே இயங்கும் குழுக்கள் என்பவற்றிற்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆயர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.
மனித உரிமைகள் பேரவை விவகாரம், அரசியல் தீர்வு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் ஆயர்கள் தமிழ் தேசியம் சார்ந்த அண்மைக்கால நகர்வுகளிற்கு ஒத்துழைக்கவில்லையென கட்சிகள், சிவில் குழுக்களிடையே அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1