யாழ் பல்கலைக்கழகத்தில் 35வது பட்டமளிப்பு நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு வருடமும் உயரிய விருதான துரைராஜா விருது வழங்குவது குறிப்பிடத்தக்கது. அதாவது கல்வி, விளையாட்டு, தலைமைத்துவம், கலாச்சாரம் என்ற அடிப்படையில் அனைத்திலும் திறமை வாய்ந்த ஒரு மாணவனுக்கு இந்த சகலதுறையின் திறமை விருதே இந்த துரைராஜா விருது ஆகும்.
அந்த வகையில் எதிர்வரும் 24,25ம் திகதிகளில் பட்டமளிப்பு நடைபெறவுள்ள நிலையில் நேற்றய தினம் இந்த விருது கலைப்பீட மாணவனான யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு உரித்தானது என்று யாழ் பல்கலைகழக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட மாணவனின் புள்ளி அடிப்படையில் தவறுதல் நடந்துள்ளதால் அதில் மாற்றம் செய்யவுள்ளதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட மாணவனை விடுத்து இன்றய தினம் வேறு ஒரு மாணவனின் பெயர் இன்றய தினம் யாழ் பல்கலைகழக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தொடர்ந்து சிறுபிள்ளை தனமான செயல்களை செய்து வருவதாகவும் எவ்வாறு இந்த விடயத்தில் தவறு ஏற்பட்ட படித்த மாந்தர்கள் அனுமதித்தனர் என்றும் இவ்வாறு செய்வதனுடாக பல்கலைக்கழகத்தினுடைய பெயர் மற்றும் மரியாதையை குறைக்கின்ற செயல் எனவும் பல்வேறு தரப்பினரால் ஆதங்கங்கள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
அதாவது அனைவர்க்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இவ்வாறானதொரு மாபெரும் தவறினை செய்வது சரியானதா? என்ற கேள்வியினையும் மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.
அத்தோடு தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பேராசிரியர்கள் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்துவிட்டு முறையான காரணங்களை சொல்ல தவறி மற்றய மாணவர்களை நிர்வாகத்தினர் கடும்போக்கில் எச்சரித்துள்ளமையினால் முன்னர் பெயர் அறிவிக்கப்பட்ட மாணவன் முதல் மற்றய மாணவர்களும் மிக மன வேதனைக்கு ஆளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இந்த விருந்தானது முன்னர் அறிவிக்கப்பட்ட மாணவனுக்கே உரித்தானது என்றும் குறித்த மாணவனுக்கு அநீதி இழைக்கப்ட்டுள்ளது என்றும் மாணவர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினரும் நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முல்லைத்தீவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் அவர்களை தொடர்பு கெட்டபோது
யாழ் பல்கலைக்கழக மாணவன் மற்றும் முல்லைத்தீவு மகாவித்தியாளயத்தின் பழைய மாணவன் அன்ரனி யேசுரட்ணம் சிறிக்கு நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த முல்லைத்தீவு மக்களுக்கும் விழுந்த இடி யாகவே உள்ளது.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அடியோடு அளிக்கப்பட்டது. இறுதிப்போரில் தன் சகோதரனை தியாகம் செய்து பல இன்னல்களை சந்தித்து கிடைத்த வளங்களை பயன்படுத்தி யாழ் பல்கலை சென்று சகலத்துறையிலும் முதலிடம் பெற்ற இந்த மாணவன் முள்ளிவாய்களில் குடியிருப்பதினாலோதான் பழிவங்கப்பட்டாரோ என்று எம்மிடம் கேள்வி எழும்பியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த அதியுயர் விருது யாரும் பெறவில்லை இந்த விருதை தட்டிப்பறிக்க செய்த சதிகள், பல அதில் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் அதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ளாத ஒருவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது அதை யாழ் பல்கலைக்கழகம் தெரிந்தும் அதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு மற்றைய மாணவனை மீண்டும் தெரிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இதை யாழ் பல்கலைகழக நிர்வாகம் உடன் சீர்செய வேண்டும்.
இதை உடன் யாழ் பல்கலைகழக நிர்வாகம் மீழ்பரிசீலினை செய்ய தவறும் பட்சத்தில் இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் நீதிமன்றம் ஊடக நீதி கேட்போம் அதேபோல் அகிம்சை வழியிலும் யாழ் பல்கலைக்கழக முன்பாக நீதி கேட்டு போராடுவோம் என்றார்.