இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (20) அறிவித்துள்ளார்.
இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரண விபரங்கள் வருமாறு-
குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (19) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சுவாசத் தொகதி செயலிழப்பு, குருதி விஷமடைவு, கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திஹாரி பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.