25.6 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

20 வயது யுவதி உள்ளிட்ட 8 பேர் கொரோனா தொற்றினால் மரணம்!

கொரோனா தொற்றினால் இலங்கையில் மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனநேற்று (18) அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 16ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர நீரிழிவு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 58 வயதான ஆண் ஒருவர், அநுராதபுரம் மெத்சிறி செவண சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோய், உக்கிர சிறுநீரக சிதைவடைவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் 16ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், மூச்சுக் குழாய் அழற்சி (Bronchitis) நிலை காரணமாக சுவாசத் தொகுதியின் செயலிழப்பு மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிதீமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 20 வயதான பெண் ஒருவர், கஹகொல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து மஹியங்கணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியாவுடன் சுவாசத் தொகுதி செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த, 52 வயதான ஆண் ஒருவர், தொம்பே மாவட்ட வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் ஆஸ்த்துமா நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 20ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதயம் மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

Leave a Comment