வில்கமுவ பொலிஸ் பிரிவில் உள்ள நுககொல்ல பகுதியில் நேற்றிரவு ஒரு இளம் ஜோடி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
தங்களின் குடியிருப்புக்கு எதிரே உள்ள ஒரு கடைக்குள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வில்கமுவை சேர்ந்த 27 வயது ஆண் மற்றும் 23 வயது பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வில்கமுவ காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டடு தற்கொலை எண்ணம் ஏற்படுபவர்கள் 1929, 1333, 0112696666, மற்றும் சாந்தி மார்கம்- 0717639898 எண்களை தொடர்பு கொள்வதன் வழியாக நம்பிக்கையாக வாழ்க்கையை எதிர்கொள்வதுடன், உங்களை சூழ்திருப்பவர்களையும் தீராக துயரத்திற்குள் ஆழ்த்தும் முடிவிலிருந்து வெளியேறலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1