இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2020 ஓகஸ்ட் 12 ஆம் திகதி விக்டோரியா வீதியில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலின் 13 ஆவது மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.
நிஷாத் மணில்க டி பொன்சேகா என்ற நபர் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பை மேற்கொள்வதற்காக ஓகஸ்ட் 1ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூருக்குள் நுழைபவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலிற்குட்பட வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் தனது அறையை விட்டு வெளியேறி தனது தனிமைப்படுத்தலை பலமுறை மீறிய பின்னர் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
பிப்ரவரி 16 அன்று டி பொன்சேகாவின் மரணம் குறித்த விசாரணை நடைபெற்றது.
விசாரணை அதிகாரி ஒருவர் மாநில மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலத்திடம் கேள்விகளை எழுப்பிய போது மரணம் தொடர்பாக விளக்கமளித்தார்.
பொன்சேகா தங்கியிருந்த தளத்தில் இருந்த இன்னொரு நண்பரின் அறைக்கு நெட்ஃபிக்ஸ் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
ஓகஸ்ட் 10ஆம் திகதி அதிகாரிகளிடம் சிக்கினார்.
பொன்சேகாவின் அறைக்கதவு திறந்திருப்பதையும், அறையில் யாருமில்லாதிருப்பதையும் பாதுகாப்பு அதிகாரி கவனித்தார். ஹொட்டலில் இருந்து வீடியோ காட்சிகள் பொன்சேகா தனது அறையை விட்டு வெளியேறுவதைக் காட்டியது.
பொன்சேகா தனது அறையில் இல்லை என்று ஒரு பாதுகாப்புக் காவலரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அறைக்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படாமல் அறை கதவு பூட்டப்பட்டது.
இரவு 11:22 மணிக்கு தனது நண்பரின் அறையை விட்டு வெளியேறிய பின்னர்அறைக்கதவு பூட்டப்பட்டிருந்ததையடுத்து, அவர் நடைதையில் ஓடுவதை வீடியோ காட்சிகள் காண்பித்தன.
சம்பவத்தை அவதானித்த நண்பர், ஹோட்டல் ஊழியர்களை எச்சரித்தார். இதையடுத்து பொன்சேகாவை மீண்டும் உள்ளே அனுமதித்தார்.
இந்த சம்பவம் குறித்து பொன்சேகாவிடம் மின்னஞ்சல் வழியாக, நடந்த சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கப்பட்டது.
இரண்டு நாட்களின் பின்னர் பொன்சேகா தற்கொலை செய்து கொண்டார்.
ஓகஸ்ட் 12ஆம் திகதி பொன்சேகாவை தொடர்பு கொள்ள முடியாததையடுத்து, நண்பர் ஹொட்டல் நிர்வாகத்தை எச்சரித்தார்.
மதியம் 1 மணியளவில் ஹொட்டலின் கடமை மேலாளர் பொன்சேகாவின் அறைக்கு சென்றார். do not disturb என அறைக்கு வெளியே குறிப்பிடப்பட்டிருந்தது. அறை மேலாளர் அறைக்குள் நுழைந்த போது பொன்சேகாவின் அசைவற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்தது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால் மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.