28.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
இலங்கை

வடக்கிற்கு 50 புதிய வைத்தியர்கள் நியமனம்!

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர்.

நேற்று பெப்ரவரி 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 13 பேரும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 9 பேரும் வவுனியா மாவட்டத்திற்கு 11 பேரும் மன்னார் மாவட்டத்திற்கு 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்று அன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த நியமனத்தில் வடமாகாணத்தின் கஸ்ட பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கும் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் சிலாவத்துறை, வங்காலை வைத்தியசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, அலம்பில், சம்பத்நுவர ஆகிய வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

போத்தல் குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

Pagetamil

15 வயது மாணவி கூட்டாக சீரழிப்பு: 7 பேர் கைது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல்: நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!