Pagetamil
மலையகம்

பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம்: பொது மக்கள் மத்தியில் பதற்றம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று இன்று (15) திகதி அதன் கம்பிகளையும் அத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளமையினால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்டத்தில் சீனாகொலை எல்லையில் இன்று காலை தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள் சிறுத்தை சீறும் சத்தத்தினை கேட்டு அப்பகுதியில் பார்த்த போது ஐந்து அடி நீளமான சிறுத்தைப்புலி ஒன்று பொறியில் சிக்குண்டு தவிப்பதனை கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஓடி பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து பொலிஸார் நல்லதண்ணீர் வன ஜீவராசி திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் வனஜீவராசிகள் அதிகாரிகள் வருவதற்கு முன் குறித்த சிறுத்தைப்புலி கம்பியினை அறுத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு ஓடியுள்ளது .

இதனால் இந்த சிறுத்தைப்புலி மீண்டும் வந்து மக்களை தாக்கலாம் என பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள நாய்களை சிறுத்தைப்புலிகள் கொண்டு சென்று தின்றுவிடுவதாகவும் தேயிலை மலைகளில் சிறுத்தைப்புலிகளின் நடமாற்றம் காணப்படுவதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும் இதுவரை பாதுகாப்பான நடவடிக்கைகள் எதுவம் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தாங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தங்களுடைய தொழில் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து உரியவர்கள் உரிய கவனமெடுத்து நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிஷாந்தன்-

இதையும் படியுங்கள்

பேருந்துக்குள் வைத்து மாணவியை அறைந்த ஆசிரியை!

Pagetamil

பிரச்சாரத்தை ஆரம்பித்த அனுஷா அணி

Pagetamil

கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!

Pagetamil

பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Pagetamil

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!