நாட்டின் முதலாவது சுப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட அணியின் தலைவர் சுஜான் பெரேரா, இந்த உதைபந்தாட்ட தொடர் நாட்டின் உதைபந்தாட்டத்தை மேம்படுத்துவதற்குத் துணை புரியும் என தெரிவித்தார்.
புதிய வீரர்களுக்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலுக்கு அமைய இந்தப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்கும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்தத் தொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.