25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

திருமணத்திற்கு முன்னர் கசமுசா… அதனால் ஏற்படும் சிக்கல்கள்…

உங்கள் காதலர் வற்புறுத்துகிறார் என்றோ அல்லது நாம தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமே என்ற அசட்டு தைரியத்திலோ, திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்.

திருமணத்திற்கு முன்னர் கசமுசா… அதனால் ஏற்படும் சிக்கல்கள்…

திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது ஆண்-பெண் இருவருக்குமே நல்லது கிடையாது. குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கடவுள் பெண்களுக்குத் தான் குழந்தை பெற்றெடுக்கும் வரத்தை கொடுத்திருக்கிறார். இதனால் திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொண்டு ஒருவேளை நீங்கள் கருவுற்றால் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைக்கும் இந்த சமுதாயம் உரிய மதிப்பளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் திருமணத்துக்கு முன் கருவுற்று வீட்டுக்குத் தெரியாமல் அல்லது வேறு சில காரணங்களால் அபார்ஷன் செய்ய நேரும்போது பிற்காலத்தில் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும்போது அது தள்ளிப்போகலாம். சில நேரங்களில் அபார்ஷன் செய்வது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். அதனால் முடிந்தவரை இதுபோல விஷயங்களில் ஆர்வம்
காட்டாதீர்கள்.

ஒன்று உங்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அதுவரை உங்கள் மேல் இருந்த ஈர்ப்பு உங்கள் காதலருக்கு குறையக்கூடும். இரண்டாவது இப்போதெல்லாம் மணமேடை வந்து திருமணம் நின்றுபோவது சகஜமாகி வருகிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை இது. அதனால் எந்த காரணம் கொண்டும் இதுபோன்ற விஷயங்களுக்கு சம்மதிக்க வேண்டாம்.

ஒருவேளை எதிர்பாராதவிதமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் சூழ்நிலை அமைந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்கிறீர்களா அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது தகுந்த பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளுங்கள். தெரிந்த மருத்துவரிடம் சொல்லி கரு உருவாகாமல் வராமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் காதலன் காண்டம் பயன்படுத்தி இருந்தாலும் கூட நீங்களும் தகுந்த பாதுகாப்பு விஷயங்களை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லதாக அமையும். இருப்பினும் கூடுமானவரையில் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது உங்கள் காதல் மற்றும் உடலுக்கு நல்லது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment