25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
தமிழ் சங்கதி

தமிழ் அரசு கட்சி குடுமிப்பிடி சண்டைகள் தீரும் அறிகுறி: மாவை- சுமந்திரன் சமரசம்!

இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவிய குழு மோதல்கள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகிறது. குழு மோதல்களை முடிவுக்கு கொண்டு வர, மாவை- சுமந்திரன் மோதலை தீர்த்து வைக்க இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஓரளவு பலனை கொடுத்துள்ளதை போலவே தெரிகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் இன்று மாலை வவுனியாவில் இடம்பெற்றது.

இதில் இரா.சம்பந்தன், முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம், எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட நான்கு பேர் சமூகமளிக்கவில்லை.https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-7363516050190133&output=html&h=90&slotname=9011141197&adk=1293233615&adf=334886237&pi=t.ma~as.9011141197&w=728&lmt=1613024012&psa=1&format=728×90&url=https%3A%2F%2Fwww.pagetamil.com%2F90839%2F&flash=0&wgl=1&adsid=NT&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMCIsIng4NiIsIiIsIjg4LjAuNDMyNC4xNTAiLFtdXQ..&dt=1613024005318&bpp=3&bdt=488&idt=61&shv=r20210208&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D9da86a38a83cb03c-22dbf82f03c600f6%3AT%3D1613023906%3ART%3D1613023906%3AS%3DALNI_Mb6t8lKHzSYMnadjtDaA-PIC64OAA&prev_fmts=1164×280%2C0x0%2C300x250&nras=1&correlator=2024186553020&frm=20&pv=1&ga_vid=183144034.1613023906&ga_sid=1613024007&ga_hid=1802847545&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=1080&u_w=1920&u_ah=1040&u_aw=1920&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=418&ady=1825&biw=1903&bih=937&scr_x=0&scr_y=0&eid=21068769%2C21068893&oid=3&psts=AGkb-H95kgOFl8DnZEJ1QOzGyfY901nZSSnGpRtPcdy6h7fwYuvcSkGAP4otqbPT3RFgwbx7bKuqw9AgeRmUlQ&pvsid=3299380670127738&pem=957&ref=https%3A%2F%2Fwww.pagetamil.com%2F&rx=0&eae=0&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C1920%2C0%2C0%2C0%2C1920%2C937&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=8192&bc=31&ifi=2&uci=a!2&btvi=2&fsb=1&xpc=upot3B9Nvu&p=https%3A//www.pagetamil.com&dtd=7253

இன்றை கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்ட போதும், முக்கியமாக மாவை- சுமந்திரன் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடனேயே கூட்டப்பட்டதை போல தெரிந்தது.

கடந்த தேர்தலுடன் எம்.ஏ.சுமந்திரன் தரப்புடன் செயற்பட்ட சி.சிறிதரன் இந்த முயற்சியை ஆரம்பித்தார். அனேகமாக, சிறிதரன் பேசிய சந்தர்ப்பங்களில் எம்.ஏ.சுமந்திரன் பேசவில்லை. சுமந்திரன் தரப்பின் பிழைகள் என்றும் சிலவற்றை சிறிதரன் சுட்டிக்காட்டினார். அப்போதும் சுமந்திரன் பேசவில்லை. சுமந்திரன் தரப்பு குரலாக சிறிதரன் பேசியதாக ஊகிக்க முடிந்ததாக, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டனர்.

அத்துடன், தானும் ஒரு தவறு செய்துவிட்டதாக சிறிதரன் தெரிவித்தார். கட்சி தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பகிரங்கமாக கூறியது தவறானதுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

மோதலை முடிவுக்கு கொண்டு வரும் இன்னொரு அஸ்திரத்தையும் சிறிதரன் வீசினார். எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை களமிறக்குவதென்றும், அவரை வெற்றியடைய தாம் அனைவரும் முழு முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

சிறிதரனின் கருத்தை சீ.வீ.கே.சிவஞானம் வழிமொழிந்தார்.

மாவை சேனாதிராசா தேர்தலில் போட்டியிடா விட்டால் நான் போட்டியிடுவேன் என கூறியிருந்தேன். ஆனால், மாவை சேனாதிராசாதான் வேட்பாளர் என்பதை நானே ஆரம்பத்திலிருந்து பிரேரித்து வருகிறேன். அவர் போட்டியிட்டால் அதை முழுமையாக ஆதரிப்பேன். அவரே வேட்பாளர் என்பதை நானும் ஆதரிக்கிறேன் என்றார்.

அத்துடன், ஜெனீவா விவகாரம், சிவில் சமூகமென்ற பெயரில் விடுக்கப்பட்ட போராட்ட அறிவிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை அடுத்த மாத இறுதிக்குள் கூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment