விகாராதிபதி ஒருவரின் வங்கி அட்டையை திருடி பணத்தை எடுத்த குற்றச்சாட்டில் மற்றொரு பௌத்த பிக்குவையும், அயல்வீட்டுக்காரையும் தங்கொட்டுவ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் 361,000 ரூபா பணத்தை திருடியுள்ளனர்.
பணம் திருட்டு போனது குறித்து விகாராதிபதி அளித்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் இன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளனர்.