25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
தமிழ் சங்கதி

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கு: சுவாரஸ்ய நிபந்தனைகளுடன் சுமந்திரன் முன்னிலையாகவுள்ள பின்னணி!

உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரின் படம், சொற்களை பிரசுரித்ததாக உதயன் பத்திரிகை மீது யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று அவர் தனது சமர்ப்பணத்தில்- உதயன் பத்திரிகை நிர்வாகத்தினரை வேறொரு வழக்கு விவகாரத்திற்கே வாக்குமூலம் வழங்க வருமாறு பொலிசார் அறிவித்திருந்தனர். எனினும், இப்பொழுது வேறொரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் பலவற்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஒரு தமிழ் பத்திரிகைக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்தது, அரசிடம் நல்ல பெயர் வாங்கவே என தெரிவித்தார்.

அத்துடன், பொலிசார் வாக்குமூலம் பெற அழைத்த முதலாவது சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.

உதயன்- சுமந்திரன் இணக்கம் எப்படி வந்தது?

பதிலுக்கு உதயனும் கிடைத்த வாய்ப்பையெல்லாம் பாவித்து தாக்கி வந்தது.

பிறகெப்படி இரு தரப்பும் இணங்கி செயற்படுகிறார்கள்?

உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள பத்திரிகையாளருடன் சுமந்திரனுக்கு உறவிருந்தது. நிறுவனத்துடன் மோதினாலும், பத்திரிகையாளர் உறவில் இருந்தார்.

இதற்குள் சட்டத்தரணி திருக்குமரனுடன் உதயன் நிர்வாகம் பேசியுள்ளது.

எனினும், எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாவதை வழக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர் விரும்பியிருந்தார். பின்னர் உதயன் நிறுவனமும் சுமந்திரனையே சட்டத்தரணியாக்கலாமென விரும்பியது.

இதன்போது, எம்.ஏ.சுமந்திரன் ஒரு நிபந்தனை விதித்தார்.

அதாவது, உதயன் உரிமையாளர் சரவணபவனே தன்னை வழக்கில் முன்னிலையாகும்படி கேட்க வேண்டுமென்பதே அந்த நிபந்தனை. கடந்த சில காலமாக ஜென்மப் பகைவர்களாக இருவரும் இருந்தனர். போதாதற்கு இருவரும் தத்தமது சிஷ்யர்களை மற்றவர் மீது கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது இருவருமே நேரில் பேச வேண்டிய நிலைமை. தனது அரசியல் அணியினரை அழைத்து சரவணபவன் விளக்கமளித்துள்ளார். பத்திரிகை விவகாரம் என்பதால், தொழில்ரீதியாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்பு கொள்ளப் போவதாக கலந்துரையாடிய பின்னர், எம்.ஏ.சுமந்திரனை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து எதிர்ப்பட்டாலே முகத்தை திருப்பிக் கொண்டு திரிந்த இருவரும் தொலைபேசியில் பேசினர்.

வழக்கில் முன்னிலையாக சம்மதம் தெரிவித்த சுமந்திரன், ஆனால், கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். உதயன் உரிமையாளரும் அதற்கு உடன்பட்டார்.

உதயன் நிறுவனத்திற்கு எதிரான முன்னைய வழக்கொன்றில் இலவசமாக சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். ஆனால், உதயன் அந்த நன்றியறிதலை வெளிப்படுத்தவில்லையென சுமந்திரன் கருதியதால் இப்படியொரு நிபந்தனையை விதித்திருப்பார், எனினும், வழக்கு முடிவில் சம்பிரதாயமாக- சிறிய தொகையொன்றையே பெற்றுக்கொள்வார் என நம்ப முடியும்.

இதுதான், உதயன் பத்திரிகைக்காக இரண்டாவது முறையாகவும் சுமந்திரன் வழக்காட வந்த கதை.

மார்ச் மாதம் நடக்கும் அடுத்த தவணை வழக்கில் சுமந்திரன் முன்னிலையாகுவார் என நம்பலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment