வாழ்க தமிழ்த்தேசியவாத அரசியல் – வளர்க தமிழ்ச்சமூகம்

Date:

-கருணாகரன்

தமிழ்த் தேசியவாத அரசியலில் தடுமாற்றங்களும் வியாதிகளும் ஏராளம், தாராளம். இல்லையென்றால், எப்போதுமே முட்டாள்தனமாகவே சிந்திப்பார்களா? நான் இங்கே தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளை மட்டும் குறிப்பிடவில்லை. இந்தக் கருத்தியலை ஆதரிக்கும் ஊடகர்கள், பத்தியாளர்கள், மக்கள் அமைப்புகள், மதப் பிரிவினர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், மக்கள் என அனைத்துத் தரப்பினரையுமே குறிப்பிடுகிறேன். இப்படிக் குறிப்பிடுவதற்கு – குற்றம் சாட்டுவதற்கு – உரிய ஆதரங்களையும் இங்கே சொல்லி விடுகிறேன். அதுதானே நியாயம்.

அதற்கு முன் ஒரு முன்சம்பவம் அல்லது கதைச் சுருக்கமொன்று:

2011 இல் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் க. வி. விக்னேஸ்வரனை, அன்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியது. சம்மந்தனே விக்னேஸ்வரனைச் சிபாரிசு செய்திருந்தார். கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அறியப்பட்ட பிரமுகர் ஒருவரை நிறுத்தினால்தான் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற எண்ணம் – நம்பிக்கை. (இது தம்மைக் குறித்த அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்பது வேறு கதை).

அந்தச் சூழலில் “இது தவறான முடிவு; பொருத்தமற்ற தெரிவு” என இதை எதிர்த்து நான் எழுதியிருந்தேன். என்னுடைய கட்டுரையை வாசித்த, கல்வித்துறையில் உயர் பதவியில் இருந்த ஒரு நண்பர் சொன்னார், “விக்னேஸ்வரன் ஐயாவின் தெரிவை நீ எப்படி மறுக்க முடியும்? சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் விக்னேஸ்வரன் ஐயா. இப்பொழுது நாங்கள் ஆயுதப்போராட்டத்தில் தோற்றுப்போய், பின்னடைந்திருக்கிறோம். விக்னேஸ்வரன் ஐயா போன்ற சட்ட நிபுணத்துவமும் சர்வதேச அங்கீகாரமும் உள்ள ஆளுமைகளை அரசியலில் நிறுத்தி, வெற்றி பெற வைப்பதே தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே வழி. இதைப் புரிந்து கொள்ளாமல், நீ ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறாய்… மக்களும் ஊடகங்களும் விக்னேஸ்வரன் ஐயாவை ஆதரிக்கின்றன…. நீ எப்போதும் பிழையாகத்தான் சிந்திக்கிறாய்…. என்று.

இன்னும் ஏதோ விளக்கமெல்லாம் சொன்னார். ஏறக்குறைய அதொரு திட்டுதல்தான்.

நான் பதிலாக எதையும் கூற விரும்பவில்லை.

இந்த மாதிரி ஆட்களுடன் விவாதிப்பது நேர விரயம். தவிர, நம்முடைய நீண்ட கால நட்புக்கும் சேதாராமாகும். இவ்வளவுக்கும் அவருடைய இரண்டு சகோதரர்கள், வெவ்வேறு அமைப்புகளில் செயற்பட்டு, போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள். ஆகவே மாற்று அரசியலை – விடுதலைக்கான அரசியலை – பற்றி அவருக்குக் கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என எண்ணினேன். ஆனால், அவரும் விக்னேஸ்வரனைப்போல தன்னுடைய துறைக்கு (கல்விக்கு) அப்பால் வேறு எதைப் பற்றிய புரிதலும் விளக்கமும் இல்லாதவராகவே இருந்தார்.

அதே காலப்பகுதியில் இதே போல, இன்னொரு நண்பரும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்தபோது என்னைத் திட்டினார். விக்னேஸ்வரனைப் பற்றித் தெரியாமல், அவருடைய தகுதியையும் பெறுமதியையும் அறியாமல் நான் மடத்தனமாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அது திருமண நிகழ்ச்சி என்பதால், அங்கே சிரித்துச் சதோசமாக இருக்க வேண்டுமே தவிர, சீரியஸாகப் பேசிக் கொந்தளிக்கக் கூடாது. என்பதால் ‘இந்த மாதிரிப் பகடிகள்தான் அதற்குப் பொருத்தமானவை‘ என்று சிரித்து வைத்தேன்.

என்னுடைய சிரிப்பு அவருக்குச் சங்கடத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதில் இருந்த ஏளனத்தைப் புரிந்து கொண்டார் போலும்.

“நக்கலா?” என்று கேட்டார். அதற்கும் சிரித்தேன். அதைத்தானே நான் செய்ய முடியும்!

இந்த நண்பர், 1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். சில காலம் அரச பணியொன்றில் உயர் பதவி வகித்தவர். விடுதலைப்போராட்ட அரசியலோடும் விடுதலை இயக்கங்களோடும் பழகிப் பரிச்சயப்பட்டவர். கலை, இலக்கியத்திலும் ஈடுபாடுடையவர். ஆனாலும் விக்னேஸ்வரனைப் பற்றிய மாயை அவரை விட்டு வைக்கவில்லை. தடுமாறி விட்டார்.

“நீ இருந்துபார் மச்சான், விக்கினேஸ்வரன் சட்டத்தினால் இந்த அரசாங்கத்தை (அப்பொழுது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது) பூட்டுவார். அதற்கான ஆதரவு சர்வதேசத்தினால் கிடைக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் தவற விடக் கூடாது. உனக்கு இதில் மாற்று அபிப்பிராயம் இருந்தால், அதை இப்ப சொல்லாதை. பாதிக்கப்பட்ட சனங்களுக்காகக் கொஞ்சம் பொறுமையாக இரு…” என்று கேட்டார்.

அவருடைய கண்கள் கலங்காத குறை. தொண்டை தளும்பவில்லை. ஆனால் கண்களும் முகமும் என்னை இறைஞ்சின.

நான் அவருடைய கைகளைப் பிடித்து அழுத்தி, முதுகில் ஆதரவாகத் தடவி, என்னுடைய ஆறுதலை உணர்த்தினேன்.

இந்த நண்பர்கள் இருவரும் தவறானவர்கள் அல்ல. தவறான முறையில் சிந்தித்தனரே தவிர, நல்ல எண்ணமுடையவர்கள். பாதிக்கப்பட்ட சனங்களுக்கு – தமிழர்களுக்கு – நியாயமான தீர்வும் பாதுகாப்பான எதிர்காலமும் கிடைக்க வேண்டும் என்று மனசபர விரும்புகின்றவர்கள். மற்றும்படி நேரடியாக எந்தக் கட்சிக்கும் எந்தத் தலைவருக்கும் பின்னால் திரிகின்றவர்கள் அல்ல. மட்டுமல்ல, தமது தனிப்பட்ட நலன்களுக்காக அரசியலையோ கட்சிகளையோ தலைமைகளையோ பயன்படுத்திக் கொள்கின்றவர்களும் அல்ல.

இதற்குப் பிறகு, பொதுவெளியில் நடந்தவை எல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தத் தேர்தலில் 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று, கூடுதலான வாக்குகளால் வெற்றியடைந்து, முதலாவது மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனாலும் அவருடைய அந்தப் பதவிக்காலத்திலேயே அவர் மீது அவருடைய கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. சிவாலிங்கம் போன்றோரின் ஆதரவினால் தப்பிப் பிழைத்தார் விக்னேஸ்வரன். ஆனாலும் அவரை முன்னிறுத்திய – நம்பிய – சம்பந்தனும் கூட்டமைப்பும் அவரைக் கைவிடும் நிலை ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அவரை இன்னொரு தரப்பினர் தமிழ்த்தேசிய அரசியலுக்கான முகமாக முன்னிறுத்தினர். அதில் பாராளுமன்ற உறுப்பிராகத் தெரிவு செய்யப்பட்டார். அதன்போதும் அவர் தவறுகளையே இழைத்தார். தவறுகளில் ஒன்று, சாராயத் தவறணைக்கான அனுமதிப் பத்திரத்துக்கு அரசாங்கத்திடம் சிபாரிசு செய்து மாட்டிக் கொண்டார்.

இதுதொடர்பாக எழுந்த கேள்விக்கு, “வாழ்வாதாரற உளநிலையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படி மக்களுடைய மூளை சலவை செய்யப்பட்டுள்ளது.

இது இளமையிலிருந்தே தங்களுடைய இரத்தத்தை அரசியலுக்குப் பாய்ச்சியவர்களை, அவர்களுடைய பங்களிப்பைப் புறக்கணிக்கும் அநீதி மட்டுமல்ல, மடத்தனமுமாகும்.

இவ்வாறான நிலையில்தான் இப்பொழுது இன்னொரு பிரமுகராக இளஞ்செழியன் முன்மொழியப்படுகிறார். இதற்கென தலையில்லாத (சிந்தனையற்ற) ஒரு கூட்டம் இருக்கிறது. (இல்லையென்றால், இளஞ்செழியனே சொல்கிறார், இலங்கையின் நீதித்துறை சிறப்பானது என்று. அப்படிச் சொல்லிக் கொண்டே, தனக்கு நீதி வழங்கப்படவில்லை, பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். இதைத்தானே ஐயா நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதைக்குறித்து யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் அவருடைய கவலையான முகமே கண்ணுக்குள் நிற்கிறது).

இந்த மாதிரியான முட்டாள்தனத்தை வஞ்சகமில்லாமல் அனைத்து விடுதலை இயக்கங்களும் செய்து தமிழ் மக்களுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளன. ஒரு காலம் (1970 -1980 களில்) வெள்ளை வேட்டிக் கள்ளர் என்றும் படித்த ஏமாற்றுப் பேர்வழிகள் என்றும் சொல்லிப் பரிகசித்து நிராகரிக்கப்பட்டவர்களிடம் சரணாகதியடைந்தன அனைத்து இயக்கங்களும்.

இலங்கை – இந்திய உடன்படிக்கையின்போது உருவாக்கப்பட்ட மாகாணசபைக்கு விடுதலைப் புலிகள் சிலரைச் சிபாரிசு செய்தனர்.

1989 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஈரோஸ் இயக்கம் அதுவரையில் ஈரோஸ் இயக்கத்துடன் பரிச்சயமற்ற சிலரைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக்கியது. அப்போது அந்த இயக்கத்துக்கு 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருந்தனர். அதற்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகள் இதே தவறைச் செய்தனர். போராட்டம், அரசியல், மக்களுடனான உறவு எதுவுமே இல்லாத ஆட்களைத் தேர்தலில் வெல்ல வைத்தனர். இதைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல். எவ், புளொட், ரெலோ என எல்லாக் கட்சிகளும் இயக்கங்களும் செய்யத் தொடங்கின.

இது பிரமுகர் அரசியலுக்கான கதவைத் திறந்து விட்டது.

இப்பொழுது பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் இருப்பவர்களில் எத்தனைபேர் அடிநிலை அரசியற் பயிற்றுவிப்பிலிருந்தும் பங்களிப்புகளில் இருந்தும் வந்தவர்கள் என்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்?

போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், போராட்டத்தில் இழப்புகளைச் சந்தித்தவர்கள், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மாவீர்கள் என்றழைக்கப்படும் குடும்பத்தினர் என எத்தனை பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது? அல்லது அவ்வாறானவர்களை முன்னிறுத்தினாலும் அவர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா? அவர்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்திச் செய்திகளையும் அறிக்கைகளையும் அளிக்குமா?

இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான கருத்தியல் வடிவமாக உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியவாதம், அதற்கான தியாகங்களைச் செய்யும் ஒரு அரசியலை முன்மொழிந்தது. 40 ஆண்டுகளாக நிகழ்ந்த அந்த அரசியலில் எத்தனையோ அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் செய்யப்பட்டன. ஒரு காலம் அதற்கான மதிப்பும் இருந்தது. அப்படி அர்ப்பணிப்புகளைச் செய்த, தியாகங்களைப் புரிந்த, தங்களுடைய இளமையை இழந்த, போராட்ட அரசியலுக்காக தங்களுடைய வாழ்க்கை, உடல் உறுப்புகள், கல்வி, உறவுகள் என எல்லாவற்றையும் இழந்தவர்களை கட்சிகளும் முன்னிறுத்த்த் தயாரில்லை. மக்களும் ஆதரிக்கத் தயாரில்லை.

இது எவ்வளவு தவறான – மோசமான சூழல்?

ஆனால், தெற்கிலே நிலைமை வேறு. அங்கே இராணுவத்தில் இருந்தவர்களை நிறுத்துகிறார்கள். உதாரணம், சரத் பொன்சேகா, கோட்டபாய ராஜபக்ஸ. தற்போதைய அரசாங்கத்தில் கூட படைத்துறையைச் சேர்ந்த ஒருவர் அமைச்சுப் பொறுப்பில் உள்ளார். இராணுவத்தினர் எழுதும் புத்தகங்களைச் சனங்கள் பெருந்திரளான நின்று வாங்குகிறார்கள். அதற்கான பதிப்பகங்களும் உண்டு. இவ்வளவுக்கும் அதையும் விட மேலான – அர்ப்பணிப்பான போராட்ட அரசியலை முன்னெடுத்தவர்கள் ஈழப்போராளிகள். அவர்களுக்கான இடம்? அவர்களை வைத்து அரசியல் செய்வோர், அந்தப் போராளிகளை, மாவீர்களை மெய்யாகவே மதித்தால், தங்களுடைய பதவியை அவர்களுக்கு விட்டுக் கொடுக்க அல்லவா முன்வர வேணும்?

சரி, அப்படிச் சபையேற்றப்படும் பிரமுகர்கள் மக்களுக்கு எதையாவது உருப்படியாகச் செய்கிறார்களா? என்றால், அதுவுமில்லை. வடமாகாணசபையில் கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா ஒரு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இறுதியில் ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இப்பொழுது அவர் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர். எந்தக் கூச்சமும் இல்லாமல் முன்வரிசையில் போய் அமர்கிறார்.

அரசியல் அனுபவம், பயிற்சி எதுவுமே இல்லாமல் பிரமுகர்களைத் தேடிப் பிடித்துப் பெரும்பொறுப்புகளில் இருத்துவதால் ஏற்படும் பிரச்சினை இது.

இந்தத் தவறுக்கு ஊடகங்களுக்கும் பொறுப்புண்டு. ஊடகங்கள் பிரமுகர்களை (தமிழ்நாட்டில் சினிமாப் பிரபலங்களை நம்புவதைப்போல) ஊதி வளர்க்கின்றன. முதலில் இந்த ஊடகங்களே திருந்த வேண்டும்.

கடந்த காலத்தில் ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் இப்படி நிறுத்தப்பட்ட பிரமுகர்கள் அரசியல் ரீதியாக எத்தகைய சாதனைகளைச் செய்தனர்? என்ன நன்மைகளை விளைத்தனர்? என்ற மதிப்பீட்டைச் செய்ய வேணும்? குறைந்த பட்சம் அப்படி அரசியலுக்கு வந்த பிறகாவது அரசியலைப் பற்றி எதையாவது அறிந்திருக்கிறார்களா? தங்களை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்களா? கதிரையை எதிர்பார்ப்பதை விட, களப் பணியைச் செய்யவே விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்களா? அப்படிக் களப் பணிகள் எதையாவது முன்னெடுத்திருக்கிறார்களா?

அன்று விக்னேஸ்வரனை நம்பிய அந்த இரண்டு நண்பர்களைப்போலவே இன்றும் பலர் உள்ளனர். விக்னேஸ்வரனைப் போலவும் பலர் உள்ளனர்.

வாழ்க தமிழ்த் தேசிய அரசியல். வளர்க தமிழ்ச்சமூகம்.

00

spot_imgspot_img

More like this
Related

Αποκαλύπτοντας την τύχη σου 9 στους 10 παίκτες λατρεύουν την απλότητα και τις μεγάλες νίκες του plin

Αποκαλύπτοντας την τύχη σου: 9 στους 10 παίκτες λατρεύουν...

n Yax Azrbaycan Kazinolar 2025 Yeni Oyunular n Bonuslar.2805

Ən Yaxşı Azərbaycan Kazinoları 2025 – Yeni Oyunçular üçün...

Uudet verovapaat nettikasinot Suomessa.1616

Uudet verovapaat nettikasinot Suomessa ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்