‘போதை மருந்து பயன்படுத்தியதால் இடை நீக்கத்தில் இருக்கிறேன்’: ரபாடா அதிர்ச்சி தகவல்

Date:

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் போதை மருந்து பயன்படுத்தியதற்காக தடையை பெற்றுள்ளேன் என ரபாடா தெரிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடையவைத்துள்ளார். 30 வயதை நெங்கும் ரபாடா, தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா திரும்பினேன். நான் தாயகம் திரும்பியதற்கு மனமகிழ் மருந்து (recreational drug) பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதே காரணம்.

நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டிற்கு திரும்புவதை எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் பயன்படுத்திய மருந்து என்னவென்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த சோதனை போட்டியின் போது எடுக்கப்பட்டதா அல்லது போட்டிக்கு வெளியே எடுக்கப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்