புதிய பாராளுமன்றத்தில் 4 முக்கிய நியமனங்கள்

Date:

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ரிஸ்வி சாலிஹ் மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி ரிஸ்வி சாலியின் பெயர் அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டது. அமைச்சர் சரோஜா பால்ராஜ் அவர்களால் வழிமொழியப்பட்டது.

இதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகரவின் பெயரை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி முன்மொழிந்தார்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சபையின் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டார்.

புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம்

சிரியாவின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக, முன்னாள்...

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்