பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை, தனது உற்ற தோழியை ஏமாற்றி அவரிடமே ஒப்படைத்து விட்டு தலைமறைவான யுவதியை பொலிசார் தேடி வருகின்றனர்.
கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
23 வயதான யுவதி ஒருவர் கைக்குழந்தையுடன் கலேவெல பொலிஸாருக்கு வந்துள்ளார். தனது தோழி அவசர பயணத்திற்கு செல்வதால், குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கேட்டடதாகவும், வெளியில் சென்ற தோழி மாலை வரை திரும்பி வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தனது தோழி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்ததாகவும், குழந்தையுடம் கலேவெல ஹோட்டலுக்கு வந்ததாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார்.
தனது உற்ற தோழியை ஏமாற்றி குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவான பெண் வெலிமடை மொரகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவராவார்.
5 நாட்களே ஆன சிசு தம்புள்ளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைக்குழந்தையுடன் பொலிஸாரிடம் வந்த 23 வயதுடைய யுவதியும் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவர்.
சந்தேகத்திற்குரிய பெண்ணை கைது செய்ய கலேவெல பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




