வவுனியாவில் அதிக அபாயமான 3 கிராமசேவகர் பிரிவுகள்!

Date:

வவுனியாவில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்படும் பகுதியாக இருப்பதாக சுகாதார தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா நகரம், நொச்சிமோட்டை, தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார தரப்பினரால் பல்வேறு முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் சுகாதார தரப்பினருக்கு உதவியாக கிராம மட்டத்திலிருந்து தற்காலிக சுகாதார பணி உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,

கிராமமட்ட அமைப்புக்களின் உதவிகளை பெற்று அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களையும் கண்காணிக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலை துணைவேந்தர் கொலை: பிள்ளையான் உள்ளிட்ட 4 பேர் மீது பொலன்னறுவ உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரதிவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல், சித்திரவதை...

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்