சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை ….

Date:

கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.
சிம்பு, கவுதம் மேனன்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது, ​​மூன்றாவது முறையாக கவுதம் மேனனுடன் சிம்பு கூட்டணி அமைத்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் படம் வரும் ஆயுதப்பூஜையையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை முழுவதுமாக முடித்துள்ள சிம்பு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ளார். அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்கும் படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக கவுதம் மேனனுடன் சிம்பு கூட்டணி அமைத்துள்ளது.

தற்போது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் பிசியாக உள்ள கீர்த்தி சனோன் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். சிம்பு படத்தில் கீர்த்தி சனோன் இணைந்தால் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்