வரலாற்றில் இன்று: குடாநாட்டில் வான் வழியாக உணவுப்பொட்டலங்கள் வீசிய இந்தியா!

Date:

வடமராட்சியை கைப்பற்ற 1987 மே 26 ஆரம்பித்த “ஒப்பரேசன் லிபரேசன்” பாரிய படை நடவடிக்கை.ஜூன் 1 முழுமையாக கைப்பற்றிவிட்டனர்.அடுத்த படை நகர்வை குடாநாட்டில் தொடர தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி சகல ஏற்பாடுகளையும் செய்தார். இந்தியா இப்படை நகர்வை எதிர்த்திருந்தது.

அதனை தடுப்பதற்கு இந்தியா ஜூன் 4 விமானங்கள் மூலம் நிவாரணப்பொருட்களை குடாநாட்டில் போட்டு,இலங்கையை மிரட்டி நிறுத்தியது. அடுத்த கட்டமாக இந்திய செஞ்சிலுவை சங்க கப்பலில் நிவாரணப் பொருட்கள் காங்கேசன்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, குடாநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. குடாநாட்டில் அமைதி நிலவியது.

சமாதானப்பேச்சுக்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தபோது இத்தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். அப்போதே புலிகள் சமாதானத்துக்கு சரிவரமாட்டார்கள் என்பதை இந்தியா நன்கு புரிந்துகொண்டது.இந்திய தலையிட்டது. இந்திய படையும் வந்தது.வரவேற்ற மக்கள். கடைசியில் இந்தியாவே முள்ளிவாயக்காலுக்கும் உதவியது. இன்று எல்லாமே முடிந்துவிட்டது.

இந்தியா தலையிடாவிட்டால் ஜனாதிபதி ஜே.ஆர். அமெரிக்கா, சீன மேற்கு நாடுகளின் உதவியுடன் புலிகளை எப்போதோ ஒழித்திருப்பார். அப்போது புலிகளிடம் ஆட்பலம், ஆயுத பலம் இல்லை. முள்ளிவாய்க்கால் அழிவுகளும் ஏற்பட்டிருக்காது
முன்பு சிங்கள ஆட்சியால் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை இந்தியாவே உதவவேண்டும் என்று கத்தினார்கள். இப்போது சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து எனவே தமிழர்களை காப்பாற்றினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்கிறார்கள்.

நெல்லியடி தாக்குதலையடுத்து அங்கிருந்து நாலாபுறமும் ஷெல் அடி! அந்த சத்தங்கள்,வீடுகள் கட்டடங்கள் அதிர்ந்ததை அனுபவித்தவர்கள் இன்றும் மறக்கமாட்டார்கள். எமது வீட்டுக்கு முன்பாக கரவெட்டி தபாற் கந்தோர் அருகில் கொடிகாமம் வீதியில் உடல் சிதறி பலியானவர்கள். வீதியில் காயமடைந்தவர்கள்.திரு இருதயக்கல்லூரி விஞ்ஞான கூடம் முற்றாக அழிவு.புனித அந்தோனியார் ஆலய வளவில் தங்கியிருந்த அகதிகளில் பலியானவர்கள்.

அவர்களின் உடல்களை துணிந்து அப்புறப்படுத்தி அடக்கம் செய்வித்த பங்குத்தந்தை அருட்பணி.ஆர்.எச்.சகாயநாயகம் அடிகளாரை பாராட்டவேண்டும்.முறிந்த தென்னைகள். அருகில் உள்ள வீடுகள் சேதம். உறவுத்தம்பி ஒருவர் முள்ளந்தண்டு பாதித்து பல ஆண்டுகளால் மரணம்.

ஷெல் அடிகள் நிறுத்தப்பட்டது. அமைதி நிலவ,படையினர் எமது பகுதிகளில் சோதனை நடத்தினார்கள். நல்லவேளை இளசுகள் பெண்கள் இல்லை.

தென்மராட்சி,வரணிக்கு குழந்தைகள்,பெண்கள் என இடம்பெயர்ந்த மக்கள்.இன்றும் அந்த நாளை மறக்கமுடியாது. நெல்லியடி மத்திய கல்லூரி முன்பாக சேதமடைந்த அழிந்த வீடுகள்.மலசலகூடத்தில் இருந்து எடுத்த சடலம்.என்று பலதை கூறலாம்.

– பத்திரிகையாளர் ரூபன் மரியரஞ்சன்-

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்