வட்ஸ்அப், வைபர் போல புதிய தொடர்பாடல் செயலியை உருவாக்கியுள்ள கிளிநொச்சி மாணவன்!

Date:

வட்ஸ்அப், வைபர் போன்று தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியின் மகனான சுகிர்தன் உருவாக்கியுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.

யாழ்ப்பாண மாணவன் வடிவமைத்ததாக கூறப்படும் செயலியை போன்று வடிவமைத்துள்ள குறித்த மாணவனை இன்று நாங்கள் சந்தித்தோம்.

இதன்போது குறித்த மாணவன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான சுபாஸ்சந்திரபோஸின் முத்த மகன் சுகர்தன் தொடர்பாடல் இலகுபடுத்தலிற்காக இணைப்பு செயலியை வடிவமைத்துள்ளார்.

குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார்.

குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய வட்ஸ்அப்,வைபர் போன்ற செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்டவிடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரணதரம் வரை கல்வி கற்று தற்போது கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர் கல்வியை தொடர்ந்து வரும் சுகிர்தன், தாம் ஆரம்ப கல்வியை பயின்ற பாடசாலையில் பல்வேறு வள குறைபாடுகள் காணப்பட்டதாகவும், உயர்தரம் வரை இல்லாது சாதாரண தரம் வரை உள்ள நிலையில் வளக் குறைபாடுகள் குறித்த பாடசாலையில் காணப்பட்டதகவும் தெரிவித்தார்.

தற்போது உயர் தர கல்விக்காக கிளிநொச்சி நகரில் உள்ள கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கி பயணிக்கும் இவ்வாறான மாணவர்களை தட்டிக்கொடுக்க முன்வருவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான தொழில்நுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கணணி வசதியோ பொருளாதார வசதியோ தமக்கு இல்லை எனவும், அவ்வாறான உதவிகள் கிடைக்குமிடத்து தொழில்நுட்ப விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்லலாம் எனவும் அந்த மாணவன் தெரிவிக்கின்றார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்