இந்தியா செய்த உதவியை மறக்காத அமெரிக்கா; கூடுதலாக 40 மில்லியன் டாலர் உதவி !

Date:

இந்தியாவுக்கு கூடுதலாக 40 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக இரண்டாம் அலையால் இந்தியா திக்குமுக்காடி போனது. கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி வழங்கப்படும் என ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 41 மில்லியன் டாலர் கூடுதல் உதவி வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் எதிர்கால சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த உதவியை அமெரிக்கா வழங்குகிறது.

இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள மொத்த உதவி 200 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சர்வதேச வளர்ச்சி முகமை, “அமெரிக்காவுக்கு தேவைப்பட்டபோது இந்தியா முன்வந்து உதவி வழங்கியது.

இப்போது கொரோனாவுடன் போராடி வரும் இந்திய மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது” என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவி மூலம் கொரோனா பரிசோதனை, கொரோனா சார்ந்த மனநல சிகிச்சை சேவைகள், தொலைதூர பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கியை பாதாளகுழுவிற்கு விற்றுவிட்டு டுபாய்க்கு தப்பியோடிய பொலிஸ்காரர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது,...

இன்று பல பகுதிகளிலும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது...

இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்