கோபா அமெரிக்கா: பொலிவியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த உருகுவே!

Date:

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு உருகுவே முன்னேறியது.

பிரேசிலின் குயாபா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11வது நிமிடத்தில் பொலிவியாவுக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் வீரர் ரோட்ரிகோ ரமல்லோ பந்தை கோல்கம்பத்துக்கு மேலே அடித்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 40வது நிமிடத்தில் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் பொக்ஸ் பகுதிக்குள் அபாயகரமான வகையிலான குரஸை அடித்தார். இதை பொலிவியா வீரர் ஏர் குயின்டெரோஸ் இடைமறித்தார். அப்போது பந்து பொலிவியா கோல்கீப்பர் கார்லோஸ் லம்பே காலில் பட்டு சுயகோலானது. இதனால் முதல் பாதியில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.

79வது நிமிடத்தில் ஃபேசுண்டோ டோரஸ் அடித்த குரஸை எடிசன் கவானி கோலாக மாற்றினார். இதனால் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உருகுவே அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. மேலும் 4 புள்ளிகளுடன் கால் இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. பொலிவியா அணிக்கு இது ஹட்ரிக் தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சிலி – பராகுவே அணிகள் மோதின. இதில் பராகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்