பருத்தித்துறையில் பொதுமக்கள் கூடுமிடங்களில் எழுமாற்றான சோதனை!

Date:

கடந்த சில நாட்களாக பருத்தித்துறை கொட்டடி மீன் சந்தையில் அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பொருட்படுத்தாது மீன் கொள்வதற்காக ஒன்று கூடுவதும் முகக்கவசம் இன்றி நடமாடுவதும் அவதானிக்கப்பட்டு வந்தது.

இதனால் தொற்று பரவும் அபாயமும் காணபட்ட்துஎனவே பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று ஏற்படுகின்றதா என்பதை பரிசோதிப்பதற்காக கொட்டடி மீன் சந்தையை இலக்கு வைத்து எழுமாற்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 162 பேர் பங்கு கொண்டனர். இந்த பரிசோதனைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் வேலைகளில் கற்கோவளம் இராணுவத்தினரும், பருத்துறை பொலிஸாரும் ஈடுபட்டனர்.

தொடர்ந்தும் இவ்வாறு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திட்டமிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்