சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்ததற்கான காரணத்தை சொன்ன வாணி போஜன்!

Date:

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்ததற்கான காரணத்தை வாணி போஜன் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் ஜெயிக்க எது முக்கியம் என்பதையும் கூறியுள்ளார்.

தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் கலக்கி வந்த வாணி போஜன் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரிய திரைக்கு வந்துவிட்டார். அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஓ மை கடவுளே மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் வாணி போஜன்.

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் வாணி போஜன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்த படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு வாணி போஜன் பதில் அளித்தார்.அப்பொழுது ஒருவரோ, சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு வாணி போஜனோ, சீரியல்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடிக்க முடியும். ஆனால் படங்களில் அப்படி இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கலாம். அந்த ஆசையில் தான் பெரிய திரைக்கு வந்தேன் என்றார்.

பெரியதிரையில் வெற்றி பெற கவர்ச்சி முக்கியமா இல்லை திறமை முக்கியமா என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு வாணியோ, கவர்ச்சி முக்கியம் தான் என்றாலும் திறமை தான் மிகவும் முக்கியம். திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்றார்.

பெரிய திரைக்கு வந்தாலும் ஆள் மாறிவிடாமல் அப்படியே இருக்கிறீர்கள். இந்த குணத்திற்காகவே நீங்கள் பெரிய ஆளாவீர்கள் என்று ரசிகர்கள் வாணி போஜனை வாழ்த்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்