நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களுக்கு உட்பட்ட 26 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
திருகோணமலை, நுவரெலியா, மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி மற்றும் முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சென்கும்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.




