சிட்டிசன் பட மீனா நடித்த ரோலில் “தல”யுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக வருத்தம் அடைகிறார் சீரியல் நடிகை!

Date:

தல அஜித்தின் வலிமை படத்திற்கு எல்லோரும் காத்துக் கொண்டிருக்க, இன்று அவர் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த படம் இன்றளவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் தலையுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக வருத்தம் அடைகிறார் பிரபல சீரியல் நடிகை ஒருவர்.

இந்த படத்தில் அப்பா, மகன் என இரு Get Up – களில் நடித்திருந்தார். இதில் மகன் அஜித்திற்கு ஜோடியாக பின்னணி பாடகி வசுந்தரா நடித்திருந்தார். அதே போல ஃபிளாஷ் பேக்கில் வரும் அப்பா அஜித்திற்கு மனைவியாக பிரபல நடிகை மீனா நடித்திருந்தார்.

ஆனால், மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது சேது படத்தில் நடித்த அபிதா தான். அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டவர். ஆனால் ஏனோ வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை இருந்தாலும் சீரியல்களில் கொடி நாட்டி உள்ளார்.இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்