நல்ல பந்துவீச்சை மதிக்கக் கூடியவர் விராட் கோலி – ரஷித் கான் பாராட்டு!

Date:

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித்-கான் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது:

எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் நன்றாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கும்போது அவர்கள் தனக்கு சாதகமில்லாத ஷாட்களையும் ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட்-கோலி அப்படிப்பட்டவர் கிடையாது.

எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அவர் தனது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார். அவர் தனது வழக்கமான பாணி ஆட்டத்தை விடுத்து வித்தியாசமாக எதுவும் செய்யமாட்டார். விராட்-கோலி தனக்கு சொந்தமான நடைமுறையில் இருந்து விலகாமல் இருப்பது தான் அவரது மிகச் சிறந்த வெற்றிகரமான செயல்பாட்டுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

நல்ல பந்து வீச்சை மதிக்கக்கூடிய அவர், மோசமான பந்து வீச்சை தண்டிக்கவும் செய்வார். விராட்-கோலி நல்ல தன்னம்பிக்கை கொண்டவர். சில பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கை இல்லாததால் தான் தடுமாறுகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டியில் டோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும். பவுலர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கக்கூடிய டோனியுடன் இணைந்து விளையாடுவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

டோனிக்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவருடன் விவாதிப்பது எனக்கு உதவிகரமாக இருந்துள்ளது. கடந்த முறை அவர் என்னிடம் பேசுகையில் பீல்டிங்கின் போது ஆக்ரோஷத்தை குறைத்து கவனமுடன் செயல்பட்டால் காயத்தைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்களை விட பந்தை கணித்து அடிப்பதில் ரோகித் சர்மா சிறப்பானவர் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்