கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் 6 பேருக்கு தொற்று!

Date:

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் 6 பேருக்கு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொட்டக்கலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 36 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வெளியாகிய நிலையில் அதில் 3 பெண்கள், ஒரு ஆண் மற்றும் இரண்டு சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனாடிதொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டக்கலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்