‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் விரைவில் ; அப்டேட் கொடுத்துள்ள யுவன்..

Date:

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் .

மாநாடு படத்தின் பாடல் வெங்கட் பிரபு பிறந்தநாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவரது தாயார் மறைந்ததால் படக்குழுவினர் பாடல் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர். அதன்பிறகு கொரோனா காலத்தில் பாடலை வெளியிடுவது சரியாக இருக்காது என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது யுவன் மாநாடு படத்தின் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மாநாடு படத்தின் பாடல் வெகு விரைவில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து சிம்பு மற்றும் யுவன் ரசிகர்கள் ஆக்டிவ் மோடுக்கு வந்து அதைக் கொண்டாடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்