நேற்று 2,377 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 2,377 COVID-19  தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 172,277 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 2,325 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த 52 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

28,601 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த 1,203 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 142,378 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,572 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்