என் பிறந்தநாளில் இப்படி நடக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை: ஷிவாங்கி உருக்கம்!

Date:

குக் வித் கோமாளி ஷிவாங்கி தனது பிறந்தநாளுக்கு ட்விட்டர் ட்ரெண்டிங் வந்தது எல்லாம் கனவு என தெரிவித்து உள்ளார்.

ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். ஆனால் அவரை குக் வித் கோமாளி ஷோ தான் பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. சென்ற மாதம் நிறைவடைந்த குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில் ஷிவாங்கி மற்றும் புகழ் இருவரது அட்ராசிட்டி தான் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஷிவாங்கியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அதிகம் வாழ்த்துக்கள் வண்டுஹ் குவிந்தது. இது அவரது 21வது பிறந்தநாள். நடிகர் சிவகார்த்திகேயனும் ஷிவாங்கிக்கு கேக் அனுப்பு சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் ஷிவாங்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி கூறி இருக்கிறார்.

” இந்த லாக்டவுணிலும் எனது பிறந்தநாளை அதிகம் ஸ்பெஷலாக மாற்றியதற்கு எப்படி நன்றி சொல்வது ஏன் தெரியவில்லை. இதை இன்னும் ஸ்பெஷலாக மாற்றிய அஸ்வினுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.”

“என் பிறந்தநாளுக்கு ட்விட்டர் ட்ரெண்டிங் போன்றவை எல்லாம் கனவு தான். அதை தற்போதும் என்னால் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் நன்றி” என ஷிவாங்கி கூறி உள்ளார். இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சிவாங்கி ட்ரெண்ட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்