பருத்தித்துறையில் சிக்கிய ‘ரோசா’: 91 கிலோ கஞ்சாவும் மீட்பு!

Date:

வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்தி வரும் சம்பவங்கள் கடந்த நாட்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

யாழ்.ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று (04) அதிகாலை 01.00 மணியளவில் 91 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ‘ரோசா’ ரக மினிபஸ் மற்றும் சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில் படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.

அத்துடன் வடக்கு கடலில் இவ்வாறான சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் இந்தியாவில் உள்ளவர்கள் மூலம் யாழ். குடாநாட்டிற்குள்ளும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்