யாழிலிருந்து மஞ்சள் கடத்தியவர்கள் சிக்கினர்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சல் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) புதன் கிழமை(14) காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சல் கட்டி மூடைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து செயல் பட்ட இலுப்பைக்கடவை பொலிஸார் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை(14) காலை வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட குறித்த மஞ்சல் கட்டி மூடைகளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள் 1989 கிலோ கிராம் நிறை கொண்டதோடு, குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள், மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்களும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரனைகளின் பின்னர் மீட்கப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...

மீண்டும் சிறை திரும்பினார் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்