பொலிஸ்காரரின் கைவிரலை கடித்த இளைஞன் கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

வாய்த்தர்க்கம் தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்