தொண்டமானாறில் கடலில் மூழ்கிய மாணவனின் சடலம் மீட்பு!

Date:

யாழ்ப்பாணம், தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து மீட்கப்பட்டார்.

உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது நண்பர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்