சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை பதிவிடுவதை மட்டுமே தற்போதைய தொழிலாக கொண்டுள்ள நடிகை பூனம் பஜ்வாவின் புதிய படங்களால் ரசிகர்கள் விக்கித்துப் போயுள்ளனர்.
தமிழில் சேவல் திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பின்னர் தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை படங்களிலும் நடித்திருந்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.
ஒரு கட்டத்தில் வாய்ப்பின்றி வீட்டில் இருந்தவர் கவர்ச்சியை கையிலெடுத்துக் கொண்டு இரண்டாவது இன்னிங்சில் குதித்தார். ரோமியோ ஜூலியட் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விஷாலின் ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
இதன்பின்னர் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் குவிய அரண்மனை 2, குப்பத்து ராஜா, முத்தின கத்தரிக்காய் போன்ற படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் குளித்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பதிவிட்டு கடந்த ஆண்டில் இது எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.