சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என சுயாதீன அரசியல் கட்சி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாடுகளுடன் உறவுகளைப் பேண வேண்டும், அதே நேரத்தில் அத்தகைய உறவுகள் இலங்கை-சீன உறவுகளுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை-சீன உறவுகளுக்குக் களங்கம் ஏற்படாத வகையில், இராஜதந்திர வழிகளில் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1