இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 947 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,847,790 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,546,945 குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 690 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 55 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1