27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இந்தியா

உண்மைக் காதலை நிரூபிக்க, பெயரை நெஞ்சிப் பச்சை குத்து: சைக்கோ காதலன் கைது!

உண்மையான காதலை நிரூபிக்க தன் பெயரை நெஞ்சில் பச்சை குத்த காதலியிடம் கட்டாயபடுத்தியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த 18 வயது இளம் பெண், கருங்கல் அருகே உள்ளார் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தோழி ஒருவருடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அந்த தோழி மூலம் மார்த்தாண்டம் பயணம் பகுதியை சார்ந்த பூ வியாபாரி அபினேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

தொடர்ந்து மணி கணக்கில் செல்போனில் மயக்கும் விதமாக பேசி பொழுதை கழித்த அந்த மாணவி, அபினேஷின் காதல் வலையில் விழுந்தார். காதல் ஜோடி இருவரும் 2 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சென்று செல்போனில் செல்பி எடுத்து சுற்றித்திரிந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவி எங்கே தன்னை விட்டுச்சென்று விடுவாரோ என்று சந்தேகித்த அபினேஷ் தனது பெயரை நெஞ்சில் பச்சை குத்த வேண்டும் அப்போது தான் நீ உண்மையாக காதலிக்கிறாய் என நம்புவேன் என்று காதலிக்கு நிபந்தனை விதித்துள்ளார்.

அந்த மாணவி பச்சை குத்த மறுத்தால் ஆத்திரம் அடைந்த அபினேஷ், செல்போனில் நாம் பேசிய குரல் பதிவுகள் மற்றும் ஜோடியாக எடுத்த செல்பி புகைப்படங்களை உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனவும் மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு பணியாத அந்த மாணவியோ, பிளாக்மெயில் செய்த அபினேஷின் பெயரை பச்சை குத்த மறுத்து காதலனை பிரேக் அப் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அபினேஷ் மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதோடு மாணவியை தொடர்பு கொண்டு உன்னை இனிமேல் வாழ விடமாட்டேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் மாணவியின் வீட்டிற்கே நேரடியாக சென்றும் தகராறு செய்துள்ளார் . தொல்லை தாங்க முடியாத மாணவி, தந்தையுடன் சென்று இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவியின் புகாரின் பெயரில் போலீசார் காதலன் அபினேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பரிமுதல் செய்து அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளை கைப்பற்றினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

Leave a Comment