28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

21 சமூக செயற்பாட்டாளர்களிற்கு நாட்டை விட்டு வெளியேற தடை!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயில்களை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது விசாரணை நடத்துமாறு கோட்டை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வழியாக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை அவர்கள் கோரினர்.

இதன்படி, விகொட வத்தே காஷ்யப தேரர், எம்.ஜி. திசர அனுராதா, எல்.என்.டி. பெரேரா, பி.பி.எம். ரமேஷ் இந்திக்க, ஆர்.ஏ. ராஜபக்ச, ஏ.ஏ. சிறில் மனதுங்க, டபிள்யூ.பி. இசுரு வர்ணகுல, ரொஷான் அலி டானிஸ் அலி, டி.சி. சண்டிமால் கமகே, டி.ஆர்.எஸ். பெந்தர ஆராச்சி, என்.எம்.தௌபீக், எம்.காசிம், நிலந்த சமித் பெர்னாண்டோ, கோரலகே பந்துல பிரபாத், எச்.எம்.டி.ஜி. மெனிக, சமீர மதுஷங்க சிறிவர்தன, சுதத் லக்ஷ்மன், எம்.ஆர்.சாருக, டி.பி. சதுரிகா சரோஜனி, ஜே.நிலந்த மற்றும் எம்.நிஷாந்தி ஆகியோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment