பொல்துவ சந்தி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு எதிரே இடம்பெற்ற மோதல்களில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவ வீரர் மற்றும் இரண்டு பொலிஸாரும் மோதல்களைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் இல்லத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொல்துவ சந்தியை அண்மித்த பெருந்திரளான மக்கள் நேற்று மாலை பாராளுமன்றத்தை நோக்கிச் சென்றனர்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வெளியேயும் ஒரு குழு ஒன்று கூடிய போது, நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1