புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய ஐந்து நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜூன் 27 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட், டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைச்சர் தம்மிக்க பெரேராவின் கீழ் வரும்.
இதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் 44(1)(ஆ) சரத்தின் கீழ், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக குளப்பு ஆராச்சிகே டொன் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி வெளியிட்டார்.