உக்ரைன் மீது படையெடுக்கும் ரஷ்யப் படைகளின் “முக்கிய இலக்குகளை” தாக்குவதற்கு அமெரிக்கா இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் செவ்வாயன்று தெரிவித்தார்.
செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் ஒரு கருத்துப் பதிவில் அவர் உறுதிப்படுத்தினார்.
“உக்ரைனுக்கு கணிசமான அளவு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்ப நாங்கள் விரைவாக நகர்ந்துள்ளோம், அதனால் அது போர்க்களத்தில் போராட முடியும் மற்றும் பேச்சுவார்த்தை மேசையில் வலுவான நிலையில் இருக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் உக்ரேனியர்களுக்கு இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவோம், அவை உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்குவதற்கு உதவும்.”
மேலும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும், எந்த ரொக்கெட் அமைப்புகள் வழங்கப்படும் என்பதை அவர் சரியாகக் கூறவில்லை.
ஹிமார் மல்டி ரொக்கெட் அமைப்புகள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிமார்கள் துல்லியமாக வழிகாட்டப்பட்ட ரொக்கட் அமைப்பாகும். 80 கிலோமீட்டர் வீச்செல்லை கொண்டது.
இந்த அமைப்புகள் உக்ரைனியர்களால் உக்ரைனுக்குள் பயன்படுத்தப்படும், ஆனால் அவை ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படாது என்று உக்ரைனிடம் உத்தரவாதம் பெறப்பட்டு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.