நாளை (24) செவ்வாய்கிழமை முதல் வீட்டுப்பாவனை எரிவாயு விநியோகம் இடம்பெறாது எனவும் பொதுமக்கள் எரிவாயு பெற வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்திடம் உள்ள எரிவாயு கையிருப்பு குறைவடைந்ததால், வீட்டு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த வேண்டியுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இரண்டு எரிவாயுக் கப்பல்கள் இலங்கைக்கு வரும் என்றும், எதிர்வரும் வியாழன் அன்று இலங்கைக்கு வரும் முதலாவது கப்பல் தரையிறங்கிய பின்னர் எதிர்வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமைக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1