25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

விலகிப் போனவர்களையும் வலைவீசிப் பிடித்த ரணில்: இரண்டு புதிய அமைச்சர்கள்?

பொதுஜன பெரமுனவிலிருந்து வௌியேறி சுயேட்சை அணியாக இயங்கி வரும், 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இந்த குழுவிலுள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, புதிய கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்தவும், விவசாய அமைச்சராக அனுர பிரியதர்ஷனவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த, சந்தைக்கு சென்ற சமயத்தில் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அமைச்சு பதவி போனால் என்ன, பழைய சட்டத்தரணி வேலை இருப்பதாகக் கூறி முச்சக்கர வண்டியில் அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில்,  ‘கல்வி அமைச்சராக’ பதவியேற்கவுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

Leave a Comment